உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / கூட்டுறவு வங்கி கடன்களில் கோல்மால்!

கூட்டுறவு வங்கி கடன்களில் கோல்மால்!

''அண்ணன் எப்ப கிளம்புவார்னு காத்துண்டு இருந்தவா, ஏமாந்து போயிட்டா ஓய்...'' என்றபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார் குப்பண்ணா.''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.''அ.தி.மு.க., அமைப்புச் செயலர் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலர் பதவிகளை, தளவாய் சுந்தரத்திடம் இருந்து பழனிசாமி பறிச்சாரோல்லியோ... இதுல, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியை,தளவாயின் எதிர் கோஷ்டியான முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் மாவட்டச் செயலர்கள் நாஞ்சில் முருகேசன், அசோகன் ஆகிய மூவரும், தங்களுக்கு கிடைக்கும்னு எதிர்பார்த்தா ஓய்...''தளவாய் பதவி பறிக்கப்பட்டதுமே, பழனிசாமியை சேலத்துலஇருக்கற அவரது வீட்டுலமூணு பேருமே போய் பார்த்து, 'நல்ல முடிவு எடுத்தேள்'னு, 'ஐஸ்' வச்சுட்டு, ஊருக்கு வந்திருக்கா... ஆனா, அவா மூணு பேருக்குமே பதவிதர விரும்பாத பழனிசாமி,மேற்கு மாவட்டச் செயலர் ஜான் தங்கத்தையே, தற்காலிகமா கிழக்கு மாவட்ட பொறுப்பாளரா நியமிச்சுட்டார்...''இதனால, 'பதவியை எதிர்பார்த்த மூணு பேரும்மூக்கறுபட்டது தான் மிச்சம்'னு, தளவாய் சுந்தரம் ஆதரவாளர்கள் கிண்டல் பண்ணிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''பாரதியார் பல்கலையில்ஜாதி பாகுபாடு பார்க்கிறதா,கவர்னரிடம் ஆராய்ச்சி மாணவர் ஒருத்தர் புகார் தந்தது பரபரப்பாச்சே பா...''என, அடுத்த தகவலுக்கு,'லீடு' தந்த அன்வர்பாயிடம், ''மேல சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''இதே பல்கலையில், போன வருஷம் பிஎச்.டி.,கனவோடு வந்த மூன்று மாணவியர், பாலியல் சீண்டல் காரணமா, பாதியிலேயே படிப்பை நிறுத்திட்டு போயிட்டாங்க...அப்ப இருந்த பதிவாளர், 'பயோ இன்பர்மேடிக்ஸ்' துறை தலைவர்னு பலரும் இந்த விவகாரத்தை மூடி மறைச்சுட்டாங்க பா...''மாணவியர் மூணு பேரும் பாலியல் புகார் தெரிவிச்சும், அதை விசாரிக்க கமிட்டி கூட அமைக்காம, 'பஞ்சாயத்து'பேசியிருக்காங்க... அப்ப, மாணவியரிடம் ஒரு கடிதம் மட்டும் வாங்கிட்டு, எம்.பில்., படிப்பா மாத்தி தர்றதா சொல்லி அனுப்பிட்டாங்க பா...''ஒரே சமயத்துல மூணு மாணவியர் ஏன் போனாங்கன்னு பல்கலைநிர்வாகமும் விசாரிக்கல...'ஜாதி பாகுபாடு பத்தி விசாரிக்கிறப்பவே, இதையும்விசாரிக்கணும்'னு பல்கலைமாணவர்கள் தரப்பு சொல்லுது பா...'' என்றார், அன்வர்பாய்.''கடன்கள்ல ஏகப்பட்டமுறைகேடு நடக்கு வே...''என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''துாத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவுவங்கி வாயிலா, சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிவழங்குதாவ... 'பதிவு செய்த சுயஉதவி குழுக்களுக்கு, அவங்க சேமிப்பு தொகையோடு, கூடுதலா குறிப்பிட்ட தொகையை கடனா வழங்கலாம்'னு விதிமுறை இருக்கு வே...''ஆனா சில குழுக்களுக்கு, துவங்கிய சில வாரங்கள்லயே, 20 லட்சம் ரூபாய் வரை கடன் குடுத்திருக்காவ... விதிகளை மீறி வழங்கிய கடன்களுக்காக, கூட்டுறவுஇணை அதிகாரிக்கு, 1 லட்சம் ரூபாய்க்கு, 10,000ரூபாய்னு கமிஷனும் போயிருக்கு வே...''இதனால, இஷ்டத்துக்கு கடன்களை வாரி வழங்கியிருக்காரு... இதுல, சில குழுக்கள், கடன்களை திருப்பி கட்டாம இழுத்தடிக்கிறதால, வங்கிக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கு வே...''அதுவும் இல்லாம, மத்திய வங்கி கட்டுப்பாட்டுல இருக்கிற, அஞ்சுவங்கிகள்ல, அளவுக்கு அதிகமா கடன்கள் வழங்கியிருக்காவ... 'இது சம்பந்தமா, உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தினா, நிறைய முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரும்'னு வங்கி ஊழியர்களே சொல்லுதாவ வே...'' எனமுடித்தார், அண்ணாச்சி.நாயர், கல்லாவை நோக்கி நகர, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி