உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / கோயம்பேடு பூ வியாபாரியிடம் பணம் பறிப்பு: 3 பேர் கைது

கோயம்பேடு பூ வியாபாரியிடம் பணம் பறிப்பு: 3 பேர் கைது

கோயம்பேடு:மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் கீதா, 51. இவர், கோயம்பேடு சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே, பூ வியாபாரம் செய்து வருகிறார்.கடந்த 7ம் தேதி, தன் மகளுடன் கோயம்பேடு பேருந்து நிலையம் பின்புறம் அமர்ந்திருந்தார். அங்கு வந்த கீதாவிற்கு தெரிந்த நபர்களான கார்த்தி, அன்புசெல்வி, சத்யா மற்றும் பாலாஜி ஆகிய நான்கு பேர், கீதாவிடம் 500 ரூபாய் கேட்டு மிரட்டினர்.அவர் பணம் அளிக்க மறுக்கவே, மதுபாட்டிலை உடைத்து தாக்குவது போல், கீதா மற்றும் அவரது மகளை மிரட்டி, அவர்களிடம் இருந்த 15,000 ரூபாயை பறித்து சென்றனர்.இது குறித்து 'தான் வாடகை வீட்டிற்கு முன்பணம் கொடுக்க வைத்திருந்த 15,000 ரூபாய் பறித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோயம்பேடு காவல் நிலையத்தில் கீதா புகார் அளித்தார்.விசாரித்த போலீசார், செங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக், 31, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அன்புசெல்வி, 38, சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சத்யா, 35, ஆகிய, மூன்று பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 670 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள பாலாஜியை, போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !