உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / தாழ்வாக செல்லும் மின்கம்பி ராமதண்டலம் வாசிகள் அச்சம்

தாழ்வாக செல்லும் மின்கம்பி ராமதண்டலம் வாசிகள் அச்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவள்ளூர்:பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமதண்டலம் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை தள்ளுவண்டியில் எடுத்து வந்து, திடக்கழிவு மேலாண்மை செய்யும் திட்டம், கடந்த 2020-21ல் துவக்கப்பட்டது.இதற்காக, குப்பையை தரம் பிரிக்க, மட்கும் மற்றும் மட்காத குப்பை கொட்டி சேகரிக்க குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. மேலும், மட்கும் குப்பையை உரமாக மாற்ற அருகிலேயே குடில் அமைக்கப்பட்டது.இந்நிலையில், குப்பை குடில் அருகே மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. காற்றடித்தால், அறுந்து கீழே விழும் நிலையில் உள்ளதால் கிராமவாசிகள் மற்றும் துப்பரவு ஊழியர்கள் அவ்வழியாக அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.எனவே, மின்வாரியத் துறையினர், ஊராட்சியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி