மணல் கடத்தல் நபரை விடுவித்த, ‘ மாமூல் ’ அதிகாரிகள்!
“தி ட்டத்தையே முடக்கிட்டாங்க பா...” என்றபடியே, நண்பர் கள் மத்தியில் அமர்ந்தார் அன்வர்பாய். “என்ன திட்டத்தை சொல்றீர் ஓய்...” என கேட்டார் குப்பண்ணா. “தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர்கள், கல்லுாரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துறாங்க... மத்திய – மாநில அரசுகள் நிதியுதவியுடன் செயல்படும் இத்திட்டத்துல, கம்ப்யூட்டர், தையல் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட தொழில் பயிற்சிகளை இலவசமா தர்றாங்க பா... “பயிற்சி காலத்தில் உதவித்தொகை, சீருடை, பயிற்சிக்கு பின் ஆறு மாசங்கள், அவங்களுக்கு வேலை கிடைக்கும் வரை உதவித்தொகையும் தருவாங்க... இந்த திட்டத்துல, கடந்த ஜூன் மாசம் பயிற்சி முடிச்ச 30 ஆயிரம் பேருக்கு, அதுக்கு அடுத்த மாசங்களுக்கான உதவித்தொகை தரல பா... “இந்த பயிற்சியை வழங்கிய மையங்களுக்கான கட்டணத்தையும் அரசு வழங்கல... அதேபோல, ஜூலை முதல் அடுத்த கட்ட பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செஞ்சாலும், அவங்களுக்கு இன்னும் பயிற்சி துவங்கல... இதனால, ‘திட்டத்தை முடக்க அதிகாரிகள் முடிவு பண்ணிட்டாங்களோ’ன்னு, பயிற்சிக்கு தேர்வானவங்க சந்தேகப் படுறாங்க பா...” என்றார் அன்வர்பாய். “மாற்று கட்சியினரை முடக்குதாரு வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி. “யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி. “சென்னை அம்பத்துார்ல சிங்கப்பூர் நிறுவனத்தின் தரவு மையத்தை, முதல்வர் விஜய் சமீபத்தில் திறந்து வச்சாரு... இதுக்கான ஏற்பாடுகளை, அந்த தொகுதியின் த.வெ.க., முக்கிய புள்ளி தான் செஞ்சிருந்தாரு வே... “முதல்வர் நிகழ்ச்சி சம்பந்தமான தகவல்களை, மாற்று கட்சிகள்ல இருந்து த.வெ.க.,வுக்கு வந்தவங்களுக்கு அவர் தெரிவிக்கல... ஏற்கனவே, ‘முதல்வர் விஜய் பிறந்த நாளுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளை, மாற்று கட்சியில் இருந்து வந்தவங்க செய்யக்கூடாது’ன்னு தடை போட்டு வச்சிருந்தாரு... இதனால, அவங்க எல்லாம் வெறுத்து போயிருக்காவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி. “பாலமுருகன், இதை யும் கேட்டுட்டு கிளம்பும்... ” என்ற குப்பண்ணாவே, “மணல் கடத்தியவரை தப்பிக்க விட்டுட்டா ஓய்...” என்றபடியே தொடர்ந்தார்... “திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கீரம்பூர் பெரிய ஏரியில் மணல் திருட்டு நடக்கறதா, வருவாய் துறையினருக்கு கலெக்டர் ஆபீஸ்ல இருந்து சமீபத்துல தகவல் வந்துது... உடனே, வருவாய் துறை அதிகாரிகள் அங்க போய், மணல் அள்ளிட்டு இருந்தவரை பிடிச்சு, மூணு வாகனங்களையும் பறிமுதல் பண்ணா ஓய்... “பிடிபட்டவர், வருவாய் துறையினர், போலீசாருக்கு, ‘ரெகுலரா’ மாமூல் குடுத்து தான் மணல் அள்ளறார்... ஆனா, கலெக்டர் ஆபீஸ் தகவல் என்பதால அவரை ஒப்புக்கு பிடிச்சு, துறையூர் போலீசில் ஒப்படைச்சா ஓய்... “இதுக்கு பிரதிபலனா, துறையூர் தாலுகா பெண் அதிகாரியின் ஜீப்புக்கு, மணல் கடத்தல் நபர் புது, ‘பேட்டரி’ வாங்கி குடுத்திருக்கார்... அதேபோல, துறையூர் போலீஸ் அதிகாரிக்கும் ஒரு தொகையை வெட் டிட்டதால, மணல் கடத்தி யவரை கைது பண்ணாம , வழக்கு மட்டும் பதிவு பண்ணிட்டு விடுவிச்சிட் டா ஓய்...” என முடித்தார் கு ப்பண்ணா. ஒலித்த மொபைல் போனை எடுத்த அந்தோணிசாமி, “செந்தில் குமார்... சித்ரா, கருணா கரன் தயவு இருக்கிறதால, நீங்க எதுக்கும் பயப்பட வேண்டாம்...” என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.