உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மாடியில் அடிதடி கீழே விழுந்தவர் உயிரிழப்பு

மாடியில் அடிதடி கீழே விழுந்தவர் உயிரிழப்பு

ஐ.சி.எப்., அயனாவரத்தில், மூன்று மாடி கட்டடம் புதுப்பிக்கும் பணியில், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த துர்கேஷ் குப்தா, 40, விர்ஜிஷ், 27, ஆகிய இருவரும் தங்கி, பெயின்டிங் வேலை செய்து வந்தனர்.மொட்டை மாடியில் நின்று இருவரும் பேசியபோது, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக, மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்தனர்.துர்கேஷ் குப்தா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயத்துடன் இருந்த விர்ஜிஷ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். ஐ.சி.எப்., போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி