உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மண்டல கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மணலி தலைவர் புலம்பல்

மண்டல கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மணலி தலைவர் புலம்பல்

மணலி,சென்னை மாநகராட்சி, மணலி மண்டல குழு கூட்டம், நேற்று காலை தி.மு.க., மண்டல குழு தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. இதில், செயற்பொறியாளர் தேவேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், 15வது வார்டு, மணலிபுதுநகரில், மீன் மார்க்கெட்டை இடித்து விட்டு, 1.56 கோடி ரூபாயில் புதிய மீன் மார்க்கெட் கட்டும் பணி; வார்டு, 17ல், 10 கோடி செலவில், கொசப்பூர் - அம்பேத்கர் நகர் கால்வாய் கட்டும் பணி; 8.30 கோடி ரூபாய் செலவில், சென்றம்பாக்கம் - பெரியார் நகர், புதிய கால்வாய் கட்டும் பணி உட்பட, 77 தீர்மானங்கள் நிறைவேறின.கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் நிறைவேறிய தீர்மானங்கள், வார்டின் அடிப்படை பிரச்னைகள் குறித்து பேசினர்.தீர்த்தி, 22வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர்எனது வார்டில் 'பயோ காஸ்' உற்பத்தி மையம் உள்ளது. இங்கிருந்து, துர்நாற்றம் வீசுவதால், சுற்றுவட்டாரத்தில் பாதிப்பு உள்ளது. பூங்காவை கூட யாரும் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. அன்பழகன் தெரு, காந்திதெரு, விளையாட்டு திடலில், மழைநீர் தேங்குகிறது. மின்வடங்கள் சாலை மேலே இருப்பதால், விபத்து அச்சம் உள்ளது. அவற்றை தரைக்கு கீழ் புதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜேஷ்சேகர், 21வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்: விடுபட்ட தெருக்களில் மழைநீர் வடிகால்கள் அமைக்க வேண்டும். ஏரியா சபை கூட்டத்தில், செயற்பொறியாளர் மற்றும் மண்டல குழு தலைவர் பங்கேற்க வேண்டும். மின் இணைப்புகள், மீண்டும் மணலிக்கு மாற்றப்பட்டதற்கு நன்றி. நெடுஞ்செழியன் தெருவில், குடிநீர் குழாய் பதிப்பு பணியால், சாலை பணி தடைபட்டுள்ளது.ராஜேந்திரன், 16 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: சடையங்குப்பத்தில் சமுதாய கூடம் அமைக்க வேண்டும். ஆண்டார்குப்பம் உள்ளிட்ட இடங்களில், பொது கழிப்பறை கட்ட வேண்டும். வார்டில், 170 தண்ணீர் தொட்டிகள் உள்ளன. அவற்றை மாதந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும்.ஏ.வி. ஆறுமுகம், தி.மு.க., மணலி மண்டல குழு தலைவர்: மண்டல குழு கூட்டங்களுக்கு, வருவாய் துறை உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் வருவது இல்லை. இதன் காரணமாக, மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் தாமதம் ஏற்படுகிறது.இது குறித்து கவுன்சிலர்களும் பலமுறை மண்டலத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கும் சூழலை உருவாக்க வேண்டும்.

இடமாறுதல்

மணலி மண்டல குழு உதவி கமிஷனர் கோவிந்தராசு இடமாறுதலாகி சென்றதால், இக்கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை