மேலும் செய்திகள்
பைக் மீது லாரி மோதி தனியார் ஊழியர் பலி
15-Mar-2025
படப்பை, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தினேஷ், 22. இவர், படப்பை அருகே தங்கி இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்தார்.இவர், நேற்று முன்தினம் இரவு படப்பை அருகே ஆரம்பாக்கம் சாலையில், 'பஜாஜ் பல்சர்' பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில், ஒரகடம் அருகே பேரிஞ்சம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார், 33, என்பவர் ஓட்டி சென்ற 'ஸ்ப்ளெண்டர்' பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தினேஷ், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். தினேஷ்குமார் வலது காலில் எலும்பு முறிவுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.விபத்து குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Mar-2025