உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  பஸ்சில் கோகைன் கடத்திய நைஜீரியா நாட்டு நபர் சிக்கினார்

 பஸ்சில் கோகைன் கடத்திய நைஜீரியா நாட்டு நபர் சிக்கினார்

கோயம்பேடு: கோயம்பேடு 100 அடி சாலையில், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூரில் இருந்து ஆம்னி பேருந்தில் வந்திறங்கிய நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபரிடம் விசாரித்தனர். அவரை சோதனை செய்த போது, கோகைன் போதை பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், பிடிபட்டவர் கெளேச்சி தேங்க்ஸ் காட், 37, என, தெரியவந்தது. அவரிடம் இருந்து 27 கிராம் கோகைன் மற்றும் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மும்பையில் இருந்து கோகைன் கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ