உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / 10 ஆயிரம் கிலோ இலவச ஸ்வீட் கேட்கும் அதிகாரிகள்!

10 ஆயிரம் கிலோ இலவச ஸ்வீட் கேட்கும் அதிகாரிகள்!

“த வறா அரசாணை வெளியிடலாமோ ஓய்...” என கேட்டபடியே, பெஞ்சுக்கு வந்தார் குப்பண்ணா. “எந்த துறை விவகாரம் பா...” என கேட்டார் அன்வர்பாய். “தமிழக அரசின் பல துறைகளின் சார்பில், தினமும் பல அரசாணைகளை வெளியிடறா... அந்தந்த துறையின் பல கட்ட அதிகாரிகள் சரிபார்த்து, கடைசியா துறை செயலர் ஒப்புதலுடன் தான் வெளியிடுவா ஓய்... “ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாறுதல் அரசாணைகளை, தலைமை செயலர் தான் வெளியிடறார்... போன 28ம் தேதி, 19 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாறுதல் அரசாணையை, தலைமை செயலர் சாய்குமார் வெளியிட்டார் ஓய்... “அதுல வரிசை எண்ணில், 4ம் நம்பர் இல்ல... அதேபோல, தென்காசி கலெக்டரா இருந்தவர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவர் பெயரே பட்டியல்ல இல்ல ஓய்... “இது தெரியாத சில சமூக ஊடகங்கள், அவரை காத்திருப்பு பட்டியல்ல வச்சுட்டதா செய்திகளை பரப்பிடுத்து... 'முதல்வருக்கு அடுத்த நிலையில் இருக்கும் தலைமை செயலர் வெளியிட்ட அரசாணையிலேயே இப்படி குளறுபடிகள் நடக்கலாமோ'ன்னு, கோட்டை வட்டாரங்கள்ல முணுமுணுக்கறா ஓய்...” என்றார் குப்பண்ணா. “இருந்த பாதுகாப்பை இழந்துட்டாருங்க...” என்றார் அந்தோணிசாமி. “யாரை சொல்றீங்க பா...” என கேட்டார் அன்வர்பாய். “துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., சரவணன் அடிக்கடி சர்ச்சைகள்ல சிக்கி, ஆளுங்கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்திட்டு இருக்காரே... “போன ஜூலை மாசம், தன்னை சிலர் லாரி ஏற்றிக் கொல்ல முயன்றதா சரவணன் பேட்டி தந்ததை அடுத்து, மாவட்ட போலீஸ் சார்பில் அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு குடுத்தாங்க... “இப்ப, அவருக்கான பாதுகாப்பை வாபஸ் வாங்கிட்டாங்க... சமீபத்துல ஏரல் பகுதியில் நடந்த கொலை தொடர்பா, அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு போன எம்.எல்.ஏ., அங்கிருந்த போலீசார் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகளை ஒருமையில திட்டியிருக்காருங்க... “இதை, அங்கிருந்த போலீசார் மொபைல் போன்ல பதிவு பண்ணி, எஸ்.பி., ஆபீசுக்கு அனுப்பவே, அவரது பாதுகாப்பை வாபஸ் வாங்கிட்டாங்க... ஆனா, 'போலீஸ் பற்றாக்குறையால வாபஸ் வாங்கிட்டோம்'னு எஸ்.பி., ஆபீஸ் தரப்பும், 'நான் தான் பாதுகாப்பு வேண்டாம்னு சொல்லிட்டேன்'னு எம்.எல்.ஏ., தரப்பும் சமாளிச்சிட்டு இருக்குதுங்க...” என்றார் அந்தோணிசாமி. “போராட்டத்துக்கு தயாராகிட்டு இருக்காவ வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... “சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்கள்ல இருக்கிற பிரபல, 'ஸ்வீட்' கடைகளுக்கு தீபாவளி, 'ஆர்டர்'கள் நிறைய வந்திருக்கு... இதனால, ராப்பகலா பலகாரங்களை தயாரிச்சிட்டு இருக்காவ வே... “அதேநேரம், இந்த கடைகளின் உரிமையாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அதிகாரிகள் சிலர், 10 டன், அதாவது 10 ஆயிரம் கிலோ ஸ்வீட், கார வகைகளை இலவசமா கேட்டு நெருக்கடி குடுத்திருக்காவ... இன்னும் சில அதிகாரிகள், சில அமைச்சர்கள் மற்றும் அவங்க உதவியாளர்களின் பெயரை குறிப்பிட்டும் கேட்டிருக்காவ வே... “இதனால, நொந்து போயிருக்கிற ஸ்வீட் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள், முதல்வரை நேர்ல பார்த்து முறையிட முடிவு பண்ணியிருக்காவ... அவரை சந்திக்க முடியலன்னா போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருக்காவ வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி. பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

R.RAMACHANDRAN
நவ 02, 2026 09:36

இலவசமா இனி ப்பு காரம் கேட்பவர்களுக்கு சாக்கடை நீரை கலந்து செய்து கொடுங்கள்.


வில்லிபுத்தூரான்
நவ 01, 2026 20:12

தற்குறிகள் ஆட்சி தீயமுக மாடலை நோக்கி நகர்கிறது


D.Ambujavalli
நவ 01, 2026 19:46

‘Sweet Box ‘. . களையே வாங்கி. பழகியவர்கள், இந்த இனிப்புகளை. டன். கணக்கில். வாங்கி. என்ன. செய்வார்கள் போட்டிக்கடை ஏதாவது. வைத்து. சம்பாத்தியப்பார்களா. முன்பு ஒரு. அமைச்சர் ஆவின். பாலகோவா 1. டன். என்று. ‘வாங்கியதாக’. கூட. செய்தி. வந்திருக்கிறது


Anantharaman Srinivasan
நவ 01, 2026 19:07

10 ஆயிரம் கிலோ ஸ்வீட், கார வகைகளை இலவசமா கேட்டு நெருக்கடி... சூப்பர். மாற்றமென்றால் இதுதான் மாற்றம். "பணமாய் கை நீட்டி வாங்கினால்" தான் லஞ்சம் என்று உணவுத்துறை அதிகாரிகள் நினைத்து கொண்டுள்ளனர்.


duruvasar
நவ 01, 2026 18:02

அரசு அதிகாரிகள் ஊழியர்கள் , தின கூலிகளை விட மிக குருவான ஊழியத்தில் பணி புரிவதால் , தீபாவளி பண்டிகை பொது கொஞ்சம் சபலம் பட்டுவிட்டார்கள். விடுங்க.


Sainathan Veeraraghavan
நவ 01, 2026 17:18

பேசிய வாய் , கேட்டு வாங்கிய கை , போட்டு பழகிய பை இவையெல்லாம் அதிகாரிகளின் குணாதிசயங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை