உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / லாரி மோதி முதியவர் பலி

லாரி மோதி முதியவர் பலி

சென்னை, சென்னையை அடுத்த அம்பத்துார் அயப்பாக்கம் ஹவுஸிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் சேகர், 63; ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் நேற்று காலை 6:00 மணியளவில், அவரது 'பைக்'கில் கோவிலுக்கு சென்றார். அயப்பாக்கம் சாலையில் சென்ற போது, பின்னால் வந்த தண்ணீர் வினியோகம் செய்யும் டிராக்டர், பைக் மீது மோதியது. இதில், சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டிராக்டர் டிரைவர், அங்கிருந்து தப்பினார்.தகவலறிந்து வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சேகரின் உடலை கைப்பற்றி, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டிராக்டரை ஓட்டி வந்த டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி