மக்கள் குறைதீர் கூட்டம்
மக்கள் குறைதீர் கூட்டம் கிருஷ்ணகிரி, டிச. 10-கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வாராந்திர மக்கள் குறை தீர் நாள் கூட்டம், கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 411 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். தொடர்ந்து மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையை சேர்ந்த ரக்சித் என்ற மாற்றுத்திறனாளிக்கு, 8,900 மதிப்பில் சிறப்பு சக்கர நாற்காலி, காவேரிப்பட்டணம் வசந்தா என்பவருக்கு, மாவட்ட கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து, 10,000 ரூபாய் காசோலையை வழங்கினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.