உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பைக்கிற்கு தீ வைத்த நபர் கைது

பைக்கிற்கு தீ வைத்த நபர் கைது

வடபழனி :வடபழனி, ஒட்டகப்பாளையம் சர்ச் சாலை, 2வது தெருவைச் சேர்ந்தவர் வடிவேல், 30. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டர், கடந்த 10ம் தேதி அதிகாலை 4:30 மணியளவில் மர்மமான முறையில் தீக்கிரையானது. இது குறித்து வடபழனி போலீசார் விசாரித்தனர்.இதில், வடபழனி, குமரன் காலனியைச் சேர்ந்த சந்துரு, 22, என்பவர், ஸ்கூட்டருக்கு தீ வைத்தது தெரிய வந்தது. சம்பவத்தன்று சந்துருவிற்கும் வேறு ஒருவருக்கும் தகராறு ஏற்பட, மது போதையில் இருந்த சந்துரு, அந்த நபரின் பைக் என நினைத்து, வடிவேலுவின் ஸ்கூட்டரை எரித்து தப்பியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ