மேலும் செய்திகள்
சேதமடைந்த ஜாகீர்மங்கலம் சாலை
23-Feb-2025
திருவாலங்காடு:பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது குண்ணவலம் கிராமம். இங்கிருந்து நாராயணபுரம் வரையிலான ஒன்றிய சாலை 2 கி.மீ., தூரம் கொண்டது. இந்த சாலை வழியாக தினமும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் நாராயணபுரம் கூட்ரோடு தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று அங்கிருந்து பேருந்து வாயிலாக திருவள்ளூர் திருத்தணி சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில் குண்ணவலம் - நாராயணபுரம் கிராமம் வரையிலான தார்ச்சாலை கடந்த இரண்டு ஆண்டுகளாக சேதமடைந்து தார்ப்பெயர்ந்து ஜல்லி சாலையாகவும் ஆங்காங்கே பள்ளம் மேடாக காட்சியளிக்கிறது.மேலும் வாகன ஓட்டிகள் சென்று வர லாயக்கற்ற நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் தாமாக விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால் அச்சமடைந்து வருகின்றனர்.எனவே பழுதடைந்துள்ள தார்ச்சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
23-Feb-2025