உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சிங்கிள்ள காலம் சாலையோர வியாபாரி வேன் மோதி பலி

சிங்கிள்ள காலம் சாலையோர வியாபாரி வேன் மோதி பலி

மாதவரம், மூலக்கடை அடுத்த எருக்கஞ்சேரி, நேரு நகர், நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் தாமஸ் சேகர், 63. இவர், மாதவரம் நீதிமன்றம் அருகே சாலை ஓரத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், பால் பாக்கெட் ஏற்றி வந்த வேன் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து, வேகமாக சென்று சாலை ஓரம் நின்றிருந்த தாமஸ் சேகர் மீது மோதியது.தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், தாமஸ் சேகரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விபத்து ஏற்படுத்திய வேன் ஓட்டுனரான விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபு, 30, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை