மேலும் செய்திகள்
லஞ்சம் வந்த வழி... ஆளுங்கட்சி விஐபி 'கிலி'
10-Nov-2025
ப ட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, ''தற்காலிக ஊழியர்களை, சொந்த வேலைக்கு பயன்படுத் துறாங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி. ''யாருவே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. ''கோவை அரசு மருத்துவமனையில், தற்காலிக பணியாளர்கள் நிறைய பேர் இருக்காங்க... இவங்கள்ல பலரை, மருத்துவமனை பெண் அதிகாரி, தன் வீட்டு வேலைகளுக்கு அனுப்பிடுறாங்க... ''வீட்டை சுத்தப்ப டுத்துறது, சமைக்கிறது, துவைக்கிறது, பெயின்ட் அடிக்கிறது மாதிரியான வேலைகளை குடுக்கிறாங்க... இது, மருத்து வ மனை உயர் அதிகாரிகளுக்கு தெரிஞ்சாலும், கண்டுக்க மாட்டேங்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''சரவணப்பிரியா மேடம்... நாளைக்கு கார்த்தாலே பேசறேன்...'' என, மொபைல் போனை ஆப் செய்தபடியே வந்த குப்பண்ணா, ''ஆட்டி படைக்கற அதிகாரிகள் கதையை கேளுங்கோ ஓய்...'' என்றபடியே தொடர்ந்தார்... ''மாநில தகவல் ஆணையத்துல, ஷகீல் அக்தர் தலைமையில் ஆறு தகவல் கமிஷனர்கள் இருக்கா... இவா எல்லாருமே தலைமை செயலருக்கு நிகரான அந்தஸ்து உள்ளவா ஓய்... ''அதனால, இவாள்லாம் ஆபீசுக்கு வர்றச்சே, அங்க பாதுகாப்புக்கு இருக்கும் போலீசார் சல்யூட் அடிக்கறது வழக்கம்... ஆனா, ஆணையத்துல இருக் கற ஒரு பெண் அதிகாரி, தனக்கும் சல்யூட் வரவேற்பு தரணும்னு கேக்கறாங்க ஓய்... ''அப்படி சல்யூட் அடிக்காத போலீஸ்காரர் ஒருத்தரை, ஆணையத்தின் உயர் அதிகாரிகிட்ட சொல்லி, 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்க... அந்த உயர் அதிகாரியும் லேசுப்பட்டவர் இல்ல ஓய்... ''உள்துறையில் இருந்து தகவல் ஆணையத்துக்கு மாற்றலாகி வந்தும், அவரது ஆட் டம், பாட்டம் குறையல... சர்வதேச தகவல் தினத்தன்னைக்கு, மாமல்லபுரத்துக்கு எல்லா ஊழியர்களும் டூர் போயிருக்கா ஓய்... ''அப்ப, பஸ்ல அதிகாரி போட்ட குத்தாட்டத்தை பார்த்து, எல்லாரும் அசந்து போயிட்டா... இந்த ரெண்டு அதிகாரிகள் தான், தகவல் ஆணையத்தையே ஆட்டி படைக்கறதா ஊழியர்கள் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''வாங்க முருகன்... ஊர்ல சங்கீதா சவுக்கியமா வே...'' என, நண்பரிடம் விசாரித்த அண்ணாச்சியே, ''வட்ட செயலர்களிடம் கெஞ்சாத குறையா பேசியிருக்காரு வே...'' என்றார். ''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய். ''திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வான, அமைச்சர் நேருவை தான் சொல்லுதேன்... இவரது தொகுதியில, மாநகராட்சியின் 29 வார்டுகள் வருது வே... ''கடந்த, 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்னாடி, 29 வார்டுகளும் 50க்கும் மேற்பட்ட வார்டுகளா இருந்துச்சு... தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் இதை சுருக்கி, 29 வார்டுகளா மாத்திட்டா வ வே... ''இந்த சூழல்ல மறுபடியும் வார்டுகளை பிரிச்சு, 58 வார்டுகளா உயர்த்தி, புதிய வட்டச் செயலர்களை நியமிக்க நேரு சமீபத்துல உத் தரவு போட்டாரு... ஆனா, தங்களது வார்டுகளின் எல்லை சுருங்குறதை, 29 வட்ட செயலர்களும் விரும்பல வே... ''இதை கேள்விப்பட்ட நேரு, சமீபத்துல வட்ட செயலர்கள் கூட்டத்தை கூட்டியிருக் காரு... அதுல பேசியவர், 'இப்போதைக்கு வார்டுகளை பிரிக்கல... தேர்தல் வர்றதால உங்க ஒத்துழைப்பு எனக்கு அவசியம்'னு கெஞ்சாத குறையா உருக்கமா பேசியிருக்காரு... 'எப்பவுமே தடாலடியா பேசக்கூடியவர், தன் வெற்றிக்கு சிக்கல் வந்துடுமோன்னு பயந்து, வட்டச் செயலர்களிடம் இறங்கி போறார்'னு கட்சியினர் பேசிக்கிடுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி. பெரியவர்கள் கிளம்ப , பெஞ்ச் அமைதியானது.
10-Nov-2025