உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவன் ரயில் மோதி பலி

தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவன் ரயில் மோதி பலி

திருவொற்றியூர், திருவொற்றியூர், சார்லஸ் நகர், மூன்றாவது தெருவை சேர்ந்தவர் முகமது குஸ் நசீப், 17. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 12ம் வகுப்பு படித்தார்.இவர், வீட்டிற்கு செல்வதற்காக, நேற்று விம்கோ ரயில் நிலைய தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, சென்னை கடற்கரையில் இருந்து, கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த மின்சார ரயில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ