பைக் திருடிய சிறுவர்கள்
திருவேற்காடு:திருவேற்காடு, மாதிரவேடு பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன், 25. இவர், கடந்த 26ம் தேதி, பணி முடித்து, தன் 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டர் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்தார்.மறுநாள் காலை ஸ்கூட்டர் திருடு போனது. விசாரித்த திருவேற்காடு போலீசார், திருட்டில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் மற்றும் 14 வயது சிறுவர்கள் மூவர் உட்பட, நான்கு சிறுவர்களை கைது செய்து, நேற்று முன்தினம் திருவள்ளூர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கி, பெற்றோருடன் அனுப்பி வைத்தார்.