உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / டி.என்.சி.ஏ., லீக் கிரிக்கெட் எத்திராஜ் அணி சாம்பியன்

டி.என்.சி.ஏ., லீக் கிரிக்கெட் எத்திராஜ் அணி சாம்பியன்

சென்னை டி.என்.சி.ஏ., என அழைக்கப்படும் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், ஆண்டுதோறும், 'லீக்' கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இதில், கல்லுாரிகள், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், அமைப்புகள் உட்பட பகுதி வாரியான கிரிக்கெட் அணிகள் பங்கேற்று, பலப்பரீட்சை நடத்துகின்றன.பங்கேற்கும் அணிகள், மண்டல வாரியாக பட்டியலிடப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் 'ஏ' மற்றும் 'பி' என, இரு குழுக்கள் உருவாக்கப்படும்.ஒரு குழுவில் எட்டு முதல் 10 அணிகள் இடம்பெற்று, ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும். இதில், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், இறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.அதன்படி, 6வது மண்டலம் 'ஏ' பிரிவில் 9 'லீக்'கில் எட்டு போட்டிகளில் வென்ற எத்திராஜ் அணி, 32 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. தாம்பரம் ஐ.ஏ.எப்., அணி இரண்டாம் இடம் பிடித்தது.தவிர, 6வது மண்டலம் 'பி' பிரிவில், யூத் சென்டர் கிரிக்கெட் குழு அணியினர், ஏழு போட்டிகளில் வென்று, 28 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தனர். இரண்டாவது இடத்தை கம்பேனியஸ் அணி பிடித்தது.எத்திராஜ் அணிக்கு டி.கே.என்., பாபு கோப்பையும், யூத் சென்டர் அணிக்கு பி.சி.ராமுடு கோப்பையும் வழங்கப்பட்டது. கம்பேனியஸ் அணி வீரர் ஆகாஷ், தொடரின் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை