மேலும் செய்திகள்
4,000 லிட்டர் பாலை கீழே கொட்டிய ஆவின் நிர்வாகம்!
20-Nov-2026
பெஞ்சில் அமர்ந்த கையுடன், ‘‘சபாநாயகர் கடிதத்துக்கே மதிப்பில்ல பா...’’ என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய். ‘‘ஆச்சரியமா இருக்கே... விளக்கமா சொல்லுங்க...’’ என கேட்டார் அந்தோணிசாமி. ‘‘தமிழக சட்டசபை சபாநாயகர் பிரபாகர்... இவர், தனக்கு தெரிஞ்சவங்க நியாயமான கோரிக்கைகளுடன் மனுக்கள் குடுத்தா, அவற்றை சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களுக்கு சிபாரிசு கடிதம் வச்சு அனுப்புவாரு பா... ‘‘ஆனா, இப்படி அவர் அனுப்பிய எந்த சிபாரிசு கடிதங்கள் மீதும், அமைச்சர்கள் யாரும் நடவடிக்கையே எடுக்கல... மூணு மாசங்களா சபாநாயகர் அனுப்பிய சிபாரிசு கடிதங்கள் எல்லாம், அமைச்சர்களின் மேஜையில துாங்கிட்டு இருக்குது பா... ‘‘இதனால, சபாநாயகரிடம் மனு குடுத்தவங்க புலம்புறாங்க... சபாநாயகருமே, இதை யாரிடம் போய் சொல்றதுன்னு தெரியாம வருத்தத்துல இருக்காரு பா...’’ என்றார் அன்வர்பாய். ‘‘இதே மாதிரி ஒரு கதை என்கிட்டயும் இருக்குல்லா...’’ என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... ‘‘ஈரோடு மாநகராட்சி மேயரா இருக்கிற பெண் நாகரத்தினம்... தி.மு.க.,வைச் சேர்ந்த இவங்க, கடந்த தி.மு.க., ஆட்சியில் மாநகராட்சியில் சகல அதிகாரங்களுடன் வலம் வந்தாங்க வே... ‘‘ஆட்சி மாறிய சூழல்ல, இவங்களை மாநகராட்சி அதிகாரிகள் யாருமே மதிக்க மாட்டேங்காவ... மாநகராட்சி வளர்ச்சி பணிகள், திட்டங்கள், செயல்பாடுகள்னு எதையும் மேயரிடம் தெரிவிக்கிறதும் இல்ல... வளர்ச்சி பணிகள் சம்பந்தமா மேயரிடம் ஆலோசனை கூட நடத்த மாட்டேங்காவ வே... ‘‘முக்கிய விவகாரங்கள்ல, மாநகராட்சி அதிகாரிகளே முடிவெடுத்து வேலையை முடிச்சிடுதாவ... இதனால, நொந்து போயிருக்கிற மேயர், ‘சும்மா பெயருக்கு தான் பதவியில இருக்கேன்... இது தி.மு.க.,வினருக்கு போதாத காலம்’னு, தன் ஆதரவாளர்களிடம் புலம்பிட்டு இருக்காங்க வே...’’ என்றார் பெரியசாமிஅண்ணாச்சி. ‘‘வரவு – செலவு கணக்குகளை தணிக்கைக்கே போகாம மறைச்சுட்டா ஓய்...’’ என்றார் குப்பண்ணா. ‘‘எந்த துறையிலங்க...’’ என கேட்டார் அந்தோணிசாமி. ‘‘சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில் கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் தரால்லியோ... பொதுவா, நகரின் வளர்ச்சிக்கான பெரிய திட்டங்களை தான் சி.எம்.டி.ஏ., சார்பில் செயல்படுத்துவா ஓய்... ‘‘ஆனா, போன தி.மு.க., ஆட்சியில் சிறிய பஸ் நிலையங்கள், நுாலகம், ஆரம்ப சுகாதார மையம் போன்ற திட்டங்களைக்கூட சி.எம்.டி.ஏ., நிதியில் கட்டுனா... அப்ப இருந்த உயர் அதிகாரிகள் துணையுடன், சி.எம்.டி.ஏ., நிதியை வரைமுறையில்லாம செலவு செஞ்சதுல, 3,900 கோடி ரூபாய் காலியாயிடுத்து ஓய்... ‘‘இவ்வளவு பெரிய தொகையை செலவு பண்ணியும், அது தொடர்பான கணக்கு ஆவணங்களை தணிக்கைக்கு அனுப்பல... விதிகளின்படி, அரசு துறைகளின் எல்லா செலவுகளையும் தணிக்கை செய்யணும் ஓய்... ‘‘ஆனா, தி.மு.க., ஆட்சியில் இருந்த சி.எம்.டி.ஏ., உயர் அதிகாரிகள் திட்டமிட்டே, செலவு சம்பந்தமான பைல்களை தணிக்கைக்கு அனுப்பாம மறைச்சுட்டா... இதனால, 3,900 கோடி ரூபாயில் எவ்வளவு முறைகேடு நடந்திருக்குன்னே தெரியல... ‘த.வெ.க., அரசு இது சம்பந்தமா விசாரிச்சா, நிறைய திமிங்கிலங்கள் சிக்கும்’னு, சி.எம்.டி.ஏ., வட்டாரங்கள்ல பேசிக்கறா ஓய்...’’ என முடித்தார் குப்பண்ணா. அரட்டை முடிவுக்கு வர, பெரியவர்கள் கிளம்பினர்.
20-Nov-2026