மாநகராட்சி பகுதிகளில் இன்று குடிநீர் நிறுத்தம்
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி பகுதிகளுக்கு இன்று (30ம் தேதி) போதுமான அளவு குடிநீர் வினியோகம் வழங்க முடியாது என, மாநகராட்சி கமிஷனர் அர்பித் ஜெயின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஈரோடு மாநகராட்சிக்கு ஊராட்சிக்கோட்டை தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வரதநல்லூரில் உள்ள ஊராட்சிக்கோட்டை தலைமை நீரேந்று நிலையத்தில் இன்று மின்தடை காரணமாகவும், பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாலும், ஈரோடு மாநகராட்சியில் உள்ள, 60 வார்டுகளுக்கும் குடிநீர் வினியோகம் போதுமான அளவு வழங்க இயலாத நிலை உள்ளது. பராமரிப்பு பணிகள் முடிவுற்ற பின், குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படும். எனவே பொதுமக்கள், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.