மேலும் செய்திகள்
மானாமதுரையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர்
26-Sep-2025
ஈரோடு, ஈரோடு மாநகராட்சியில், இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.இது குறித்து கமிஷனர் அர்பித் ஜெயின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாநகராட்சிக்கு, ஊராட்சிக்கோட்டை தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இதில், நேற்று சூரியம்பாளையம் அருகில் நீருந்து குழாயின் பிரதான வால்வு பழுது ஏற்பட்டு, சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் இன்று (அக்.,23) குடிநீர் வினியோகம் சீராக வழங்க இயலாது. பணிகள் முடிந்த பிறகு நாளை முதல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
26-Sep-2025