திருந்தி வாழும் பெண்களுக்கு நலத்திட்டம்
புதுவண்ணாரப்பேட்டைமது, ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் விற்பனை செய்து கைது செய்யப்பட்டு, தற்போது திருந்தி வாழும் பெண்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில், புதுவண்ணாரப்பேட்டை போலீசார் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து, மக்கள் மறுவாழ்வு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது.இதில், வடக்கு மண்டல மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி கமிஷனர் ரவி, புதுவண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் ஆகியோர் நலத்திட்டம் வழங்கினர்.