உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஒரு கி.மீ., பாலத்திற்கு ரூ.195 கோடி செல்வா?

ஒரு கி.மீ., பாலத்திற்கு ரூ.195 கோடி செல்வா?

சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு சார்பில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, 3.21 கி.மீ., நான்கு வழி மேம்பால சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான திட்டச் செலவு, 621 கோடி ரூபாய் என்பது மிக அதிகம். ஐந்தாண்டுகளில், சென்னையில் கட்டப்பட்ட பாலங்களின் செலவைவிட, இந்தப் பாலத்தின் செலவு இரு மடங்காக உள்ளது. கடந்த 2022ல் மேடவாக்கம் பாலம், கி.மீ.,க்கு 101 கோடி ரூபாயில் கட்டப்பட்டது. மதுரை -- நத்தம் மேம்பாலத்தை, கி.மீ.,க்கு, 100 கோடி ரூபாய் செலவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்தது. ஆனால், தேனாம்பேட்டை -முதல் சைதாப்பேட்டை வரையிலான மேம்பாலம், அதைவிட, 95 சதவீத கூடுதல் செலவில் கட்டப்பட்டு வருவது ஏன் என்ற, கேள்வி எழுகிறது. இதன் பின்னணி குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். - அன்புமணி, பா.ம.க., தலைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை