உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / குப்பை கிடங்கில் லாரி மோதி தொழிலாளி பலி

குப்பை கிடங்கில் லாரி மோதி தொழிலாளி பலி

கொடுங்கையூர், கொடுங்கையூர், எழில் நகரை சேர்ந்தவர் விஜயகுமர், 30; கொடுங்கையூர் குப்பை கிடங்கில், குப்பை பொறுக்கும் வேலை செய்து வந்தார்.இவருக்கு திருமணமாகி, 5 வயதில் மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியை பிரிந்த விஜயகுமார், மகன், பெற்றோருடன் வசித்தார்.குடி பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார், தொடர்ந்து குடித்து விட்டு வந்து, பெற்றோரிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, மது அருந்திவிட்டு கொடுங்கையூர் குப்பை கிடங்கில் குப்பை குவியல் அருகே படுத்துள்ளார்.அப்போது, குப்பை கிடங்கிற்கு வந்த அடையாளம் தெரியாத குப்பை லாரி, விஜயகுமார் மீது ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.நேற்று காலை குப்பை பொறுக்க வந்த பெண்கள், உயிரிழந்து கிடந்த விஜயகுமாரை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.கொடுங்கையூர் போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ