புழல் ஏரியில் மூழ்கி வாலிபர் பலி
அம்பத்துார்அம்பத்துார், கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 38. இவர், நேற்று முன்தினம் இரவு மதுபோதையில், முருகாம்பேடு பகுதியை ஒட்டி உள்ள புழல் ஏரி கரைக்கு செல்வதாக கூறி சென்றவர், வீடு திரும்பவில்லை. தகவலறிந்த அம்பத்துார் போலீசார், அம்பத்துார் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்களின் உதவியுடன், புழல் ஏரியில் தேடினர்.நள்ளிரவு வரை தேடுதல் நடத்திய நிலையில், நேற்று காலை கார்த்திக்கின் உடல், அப்பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. அம்பத்துார் போலீசார், கார்த்திக்கின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.