தகவல் சுரங்கம்
குறைந்த மாவட்டம் உள்ள மாநிலம்நிர்வாக வசதிக்காக லடாக் யூனியனில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள், எட்டு யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இதில் மொத்தம் 788 மாவட்டங்கள் உள்ளன. இதில் முதல் மூன்று இடங்களில் உத்தர பிரதேசம் 75, மத்திய பிரதேசம் 55, ராஜஸ்தான் 55 உள்ளன. குறைந்த மாவட்டம் உள்ள மாநிலம் கோவா. இங்கு 2 மாவட்டம் உள்ளது. இதற்கடுத்து சிக்கிம் 6, திரிபுரா 8 உள்ளன. யூனியன் பிரதேசங்களில் 20 மாவட்டங்களுடன் முதலிடத்தில் ஜம்மு காஷ்மீர் உள்ளது. அடுத்த மூன்று இடத்தில் டில்லி 11, லடாக் 7, புதுச்சேரி 4 உள்ளன.