தகவல் சுரங்கம்
தற்கொலை தடுப்பு தினம்பிரச்னைகள் இல்லாத மனிதர்களே இல்லை. அதை சமாளித்து போராடி தான் வாழ்வில் முன்னேற வேண்டுமே தவிர எதிர்மறையாக சிந்தித்து தற்கொலை செய்வது கோழைத்தனமான செயல். பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு, தற்கொலை என சிலர் சிந்திக்காமல் முடிவெடுக்கின்றனர். இதனால் அவரை சார்ந்திருப்பவர் எந்தளவு கஷ்டப்படுவர் என அறிவதில்லை. தற்கொலை அறவே கூடாது என்பதை வலியுறுத்தி செப்.10ல் உலக தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'தற்கொலை பற்றிய கதையை மாற்றுதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.