உள்ளூர் செய்திகள்

தகவல் சுரங்கம்

சிவப்பு கோள் தினம்சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்து உள்ள கோள் செவ்வாய். இது சிவப்பு கோள் எனவும் அழைக்கப்படுகிறது. செவ்வாய் கோள் குறித்து பல நாடுகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. 1964 நவ. 28ல் அமெரிக்காவின் 'நாசா', 'மரைனர் 4' விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியது. இது 1965 ஜூலையில் செவ்வாய் கோளின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இது உலகில் முதன்முதலாக செவ்வாய் கோளின் புகைப்படம், அரிய தகவல்களை பூமிக்கு அனுப்பியது. இதை அங்கீகரிக்கும் விதமாக விண்கலம் ஏவிய நாள் (நவ. 28) 'சிவப்பு கோள்' தினமாக கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !