தகவல் சுரங்கம் : ஆயுத குறைப்பு தினம்
உலகில் எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. அமைதி மட்டுமே நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் வளர்ச்சியை தரும். போரில் பயன்படுத்தும் பல்வேறு ஆயுதங்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். உலகில் அணு ஆயுதம் உட்பட ஆயுதங்களை குறைப்பது, அதன் பரவலை தடுக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மார்ச் 5ல் சர்வதேச ஆயுத குறைப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் ராணுவத்துக்கு செலவிடும் நிதி, தொடர்ந்து 9வது ஆண்டாக அதிகரித்துள்ளது. 2023ல் 209 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. உலக நாடுகளிடம் 12,400 அணு ஆயுதங்கள் உள்ளன.