கருப்பு தான் நமக்கு நல்ல கலரு
பொருளாதாரத்தில் தான் கருப்பு பணம் நாட்டின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஆனால் உடலுக்கு கருப்பு நிறம் நன்மை செய்கிறது. சூரியனின் ‘அல்ட்ரா வயலட்' கதிர்கள் நம் மேல் விழும்போது, அதன் கதிர்களினால் நமது தோலில் ‘கேன்சர்' வராமல் இருக்க இயற்கையாகவே ‘மெலனின்' என்ற ஒரு கருப்பு நிறம் சேர்கிறது. இதனால் தான் நமது உடலில் வெயில் படும் இடங்கள் கருத்தும் உடையினால் மூடப்பட்ட இடங்கள் கொஞ்சம் வெளுத்தும் இருக்கின்றது. கண்ணில் ‘ரெட்டினா'வின் பின்புறம் உள்ள மெலனின் கண்ணின் பார்வையை கூர்மையாக்குகிறது.