உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம்: கடலோர காவல் படை தினம்

தகவல் சுரங்கம்: கடலோர காவல் படை தினம்

தகவல் சுரங்கம்கடலோர காவல் படை தினம்இந்திய கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதில் கப்பல்படைக்கு உதவும் விதமாக 1977 பிப்.1ல் கடலோர காவல் படை உருவாக்கப்பட்டது. இது கப்பல்படையுடன் இணைந்துசெயல்படுகிறது. இதன் தலைமையகம் டில்லி. இது தவிர மும்பை, சென்னை, கோல்கட்டா, போர்ட் பிளேர், காந்திநகரில் மண்டல தலைமையகங்கள் உள்ளன. கப்பல், ரோந்து படகு, போர் விமானங்கள் இப்படையிடம் உள்ளன. 20 ஆயிரம் வீரர்கள் பணியாற்றுகின்றனர். கடலோர காவல் படையினரின் அர்ப்பணிப்பை பாராட்டும் விதமாக பிப்.1ல் கடலோர காவல் படை தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !