தகவல் சுரங்கம் : முதல் பறவைகள் சரணாலயம்
தகவல் சுரங்கம்முதல் பறவைகள் சரணாலயம்இந்தியாவில் 2023 நவ. கணக்கின் படி, 573 பல்லுயிர் சரணாலயங்கள் உள்ளன. இவற்றின் மொத்த பரப்பளவு 1.22 லட்சம் சதுர கி.மீ. இதில் 53 புலிகள் காப்பகம், 33 யானைகள் காப்பகம் உள்ளன. இந்தியாவின் முதல் பறவைகள் சரணாலயம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கலில் 1936ல் அமைக்கப்பட்டது. பரப்பளவு 74 ஏக்கர். பல வெளிநாட்டு பறவைகள் வலசை வருகின்றன. நாட்டில் பரப்பளவில் பெரிய வனவிலங்கு சரணாலயம் (7506 சதுர கி.மீ.) குஜராத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தில் உள்ளது. அந்தமான் தீவில் தான் அதிக (96) பல்லுயிர் சரணாலயங்கள் உள்ளன.