தகவல் சுரங்கம் : தேசிய சட்ட சேவைகள் தினம்
தகவல் சுரங்கம்தேசிய சட்ட சேவைகள் தினம்இந்தியாவில் அனைவருக்கும் நியாயமான நீதி நடை முறை கிடைப்பதை வலியுறுத்தி நவ. 9ல் தேசிய சட்ட சேவைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்திய சட்ட உதவிகள் ஆணைய சட்டம் 1995 நவ. 9ல் அமலுக்கு வந்தது. இதை நினைவுபடுத்தும் விதமாக இத்தினம் தொடங்கப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு விதிகள், வழக்கு தொடுப்பவர்களின் உரிமை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கம். தேவைப்படுபவருக்கு இலவச சட்டஉதவி, ஆலோசனை உள்ளிட்ட நடவடிக்கைகளை தேசிய சட்ட உதவிகள் ஆணையம் மேற்கொள்கிறது.