உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : கங்கையின் துணை நதி

தகவல் சுரங்கம் : கங்கையின் துணை நதி

தகவல் சுரங்கம்கங்கையின் துணை நதிகங்கை ஆற்றின் துணை நதிகளில் ஒன்று யமுனை. இது உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் சராசரி கடல்நீர்மட்டத்தில் இருந்து 14,800 அடி உயர யமுனோத்ரி சிகரத்தில் இருந்து உற்பத்தியாகிறது. உத்தராகண்ட், ஹரியானா, டில்லி, உபி.,யில் 1376 கி.மீ., துாரம் பாய்ந்து 'கும்பமேளா' நடக்கும் உ.பி.,யின் பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் கங்கை ஆற்றுடன் இணைகிறது. 5.7 கோடி பேர் இந்த ஆற்றை நம்பி உள்ளனர். டில்லியின் 70 சதவீத தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. ஆக்ராவில் இந்த நதிக்கரையில் தான் 'தாஜ்மஹால்' அமைந்துள்ளது. இதற்கு பல துணை நதிகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை