தகவல் சுரங்கம் : தியாகிகள் தினம்
தகவல் சுரங்கம்தியாகிகள் தினம்இந்திய சுதந்திர போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவர் மகாத்மா காந்தி. சுதந்திரம் பெற்ற நேரத்தில் கூட, ஒற்றுமையை வலியுறுத்தி கோல்கட்டாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். 'அகிம்சை' கொள்கையை வாழ்க்கை முழுவதும் கடைபிடித்தார். 1948 ஜன.30ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது நினைவு தினம் உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜன.30ல் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர்களின், வீரச் செயல்களை இன்றைய தலைமுறையினருக்கு தெரிவிப்பதே இதன் நோக்கம்.