உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் நவ 20

தகவல் சுரங்கம் நவ 20

சபரிமலையால் பெண்ணுக்கு பெருமை சபரிமலை என்ற பெயர் வர காரணம் சபரி வாழ்ந்த மலை. ‘மசபரி’ என்று வால்மீகி குறிப்பிடுவதை கம்பர் தமிழ் ஒலிக்குறிப்பிற்கேற்ப ‘சவரி’ என்று காட்டினார். கம்பராமாயணத்தில் சவரி என்றழைக்கப்படும் வயதான பெண் துறவியை பற்றி 9 பாடல்கள் உள்ளன. ஆனால் கம்பர் இந்த 9 பாடல்களையே தனிப்படலமாக ‘சவரி பிறப்பு நீங்கு படலம்’ என்று அமைத்துள்ளார். ’இந்த படலம் ஆரண்ய காண்டத்தில் வருகின்றது. துளசிதாஸர் ‘‘ராம சரித மானஸ்” காவியத்தில் சபரியைக் காட்டுகிறார். அதில் சபரி செய்ததாக ஒன்பது வகையான பக்திகளைக் கூறுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ