தகவல் சுரங்கம்:பாலஸ்தீன ஒற்றுமை தினம்
தகவல் சுரங்கம்பாலஸ்தீன ஒற்றுமை தினம்இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான சண்டை பல ஆண்டுகளாக தொடர்கிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே போர் தீவிரமாக தொடர்ந்து நடக்கிறது. பாலஸ்தீனத்தில் 45 ஆயிரம் பேரும், இஸ்ரேலில் 955 பேரும் பலியாகியுள்ளனர். இந்நிலையில் 1947 நவ. 29ல் பாலஸ்தீனத்தை, யூதர் நாடு, அரபு நாடு என இரு நாடுகளாக பிரிக்கும் தீர்மானத்தை, ஐ.நா., சபை ஏற்றுக்கொண்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக ஐ.நா,. சார்பில் ஆண்டுதோறும் நவ. 29ல் பாலஸ்தீன ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்படுகிறது.