உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம்: உலகின் ஆழமான ஆறு

தகவல் சுரங்கம்: உலகின் ஆழமான ஆறு

ஆப்ரிக்காவின் முக்கியமானது காங்கோ ஆறு. இது உலகின் ஆழமான ஆறு என அழைக்கப்படுகிறது. இதன் அதிகபட்ச ஆழம் 720 அடி. நீளம் 4700 கி.மீ. இதற்கு 25 துணை ஆறுகள் உள்ளன. இது காங்கோ நாட்டில் 62 சதவீதம், மத்திய ஆப்ரிக்க குடியரசில் 10%, அங்கோலாவில் 8% பாய்கிறது. உலகின் நீளமான ஆறுகளில் 9வது இடத்தில் உள்ளது. உலகின் இரண்டாவது நீளமான அமேசான் ஆறுக்கு அடுத்து, உலகில் அதிகளவில் தண்ணீர் ஓடும் ஆறு இதுவே. இந்த ஆற்றின் வழித்தடங்களில் 40 நீர் மின் நிலையங்கள் உள்ளன. ஆப்ரிக்காவின் மொத்த நிலப்பரப்பில் 13 சதவீத பகுதியில் பாய்கிறது. அட்லாண்டிக் கடலில் கலக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ