தகவல் சுரங்கம் : நீண்டகால முதல்வர் யார்
தகவல் சுரங்கம்நீண்டகால முதல்வர் யார்சமீபத்தில் பீஹார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ்குமார், அம்மாநிலத்தின் நீண்டகால முதல்வர் (19ஆண்டு, 79 நாட்கள்). தற்போதைய முதல்வர்களில் தொடர்ந்து பதவி வகிப்பவர்களில் மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு (14 ஆண்டு, 183 நாள்) அடுத்து 2வது இடத்தில் நிதிஷ்குமார் (10 ஆண்டு, 271 நாள்) இருக்கிறார். ஒட்டு மொத்தமாக நாட்டில் நீண்டகாலம் முதல்வராக இருந்தவர்களில் 8வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் பவன்குமார் சாம்லிங், சிக்கிம் (24 ஆண்டு, 165 நாள்), நவீன் பட்நாயக், ஒடிசா (24 ஆண்டு, 99 நாள்), ஜோதிபாசு, மேற்கு வங்கம் (23 ஆண்டு, 137 நாள்) உள்ளனர்.