தகவல் சுரங்கம் : உலக ரேபிஸ், தகவல் தினம்
தகவல் சுரங்கம்உலக ரேபிஸ், தகவல் தினம்உலகில் ஆண்டுக்கு 60 ஆயிரம் பேர் ரேபிஸ் பாதிப்பால் உயிரிழக்கின்றனர். 1885ல் ரேபிஸ் வைரஸ்க்கு பிரான்சின் லுாயிஸ் பாஸ்டர் தடுப்பு மருந்து கண்டுபிடித்தார். இதை அங்கீகரிக்கும் விதமாக அவரது நினைவு தினம் (செப். 28) உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 'ஒன்றாக இணைந்தால் வலிமை அதிகம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. * தகவல்களை தேடுதல், பெறுதல் என்பது ஜனநாயகம், சமத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வலியுறுத்தி யுனெஸ்கோ சார்பில் செப். 28ல் தகவலுக்கான உலகளாவிய அணுகல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.