தகவல் சுரங்கம்: சிறப்பு வானிலை மையம்
இந்திய வானிலை மையம் ஆங்கிலேயர் ஆட்சியில் 1875 ஜன. 15ல் தொடங்கப்பட்டது. மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. தலைமையகம் டில்லி, இது தவிர சென்னை, மும்பை, கோல்கட்டா, நாக்பூர், கவுகாத்தி, டில்லி என ஆறு இடங்களில் மண்டல அலுவஙகங்கள் உள்ளன. உலக வானிலை மையத்தின் ஆறு மண்டல சிறப்பு வானிலை மையங்களில் இந்திய வானிலை மையமும் ஒன்று. சென்னை வானிலை ஆய்வு மையம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழகம், அந்தமான், லட்சத்தீவு, புதுச்சேரி பகுதிகளுக்கு வானிலை தகவல்களை வழங்குகிறது.