நவம்பர் மாதுளை மாதம்
மாதுளைக்கு என்று நவம்பர் மாதத்தை அமெரிக்காவில் கொண்டாடுகின்றனர். செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை உலகின் பெரும்பாலான பகுதிகளில் மாதுளை அறுவடை நடைபெறுகிறது. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவையும் உள்ளன. மாதுளையின் பூர்வீகம் ஈரான். இந்தியாவில் மாதுளை உற்பத்தியில் முதலிடத்தில் மகாராஷ்டிராவும், அடுத்த இடத்தில் கர்நாடகாவும் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது. இருமலை நிறுத்துகிறது.