இரக்கமுள்ள யானை!
தரையில் வாழும் விலங்குகளில் மிகப் பெரிய மூளையுள்ளது யானை. நினைவாற்றல் மிக்கது. மனிதர்களுக்கு அடுத்தபடியாக அறிவில் சிறந்தவையாக கருதப்படுகிறது. இரக்க உணர்ச்சி மிக்க இந்த மிருகம் பற்றிய அரிய தகவல்களை பார்ப்போம்.யானைகள்...* வினாடிக்கு, மூன்று லிட்டர் தண்ணீரை உறிஞ்சும்* ஒரு நாளைக்கு, 210 லிட்டர் தண்ணீர் குடிக்கும்* தும்பிக்கை விரிந்து சுருங்கும் அமைப்பு உடையது* கர்ப்ப காலம், 22 மாதங்கள்* பெரும்பாலும் ஒரே குட்டி ஈனும்* கண் பார்வை, 25 அடி துாரம் மட்டுமே தெரியும்* மூன்று மணி நேரம் மட்டுமே துாங்கும்* உணவை தேடி ஒரு நாளில், 16 மணி நேரத்தை செலவிடும். இதற்காக, 35 கி.மீ., நடக்கும்* தோல் மென்மையைக் காக்க, மண்ணை வாரி உடல் மீது போட்டுக் கொள்ளும்* முன்னங்காலில், ஐந்து நகமும், பின்னங்காலில், நான்கு நகமும் இருக்கும்* சிங்கம் தான், இதன் எதிரி. ஏழு பெண் சிங்கங்கள் சேர்ந்தால், ஒரு யானையை கொன்று விடும். உலகில், 50 ஆயிரம் யானைகள் தான், உள்ளதாக ஓர் ஆய்வு கூறுகிறது.- செல்வ கணபதி