உள்ளூர் செய்திகள்

தித்திக்கும் திராட்சை!

புளிப்பும், சற்றே இனிப்பும் கொண்ட திராட்சைப் பழத்தில் ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. கருப்பு, பன்னீர், காஷ்மீர், ஆங்கூர், காபூல், விதையில்லா திராட்சை என்று, பல ரகங்கள் உள்ளன. சுண்ணாம்புச் சத்து நிறைந்தது. உலர் திராட்சை அதிகச் சத்துகள் நிறைந்தது. திராட்சை, கொடி வகை தாவரம். படரும் தன்மையுடையது. வேரில் வளர்ச்சி கண்டு, கிளை பரப்பும் தன்மையுடையது! தாய்க் கொடியிலிருந்து கிளை வெட்டி அல்லது வேர்த்தண்டுகளை துண்டாக்கி நடலாம்.திராட்சையில் வைட்டமின் சத்துகள் நிறைந்துள்ளன. எல்லா வித சிகிச்சைகளின் போதும் திராட்சைப் பழம் உண்ணலாம்.திராட்சை பழம்...* ரத்தத்தை சுத்தப்படுத்தும்* நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது* செரிமான உறுப்புகள் சோர்வடையாத வகையில், ரத்தத்தில் எளிதாக கலக்கும்* திசுக்களுக்கு புத்துயிர் அளிக்கும்* பதற்றத்தைக் குறைப்பதில் பிரதான பங்காற்றும்* சிறுநீரகம் நன்கு செயல்பட உதவும்* கல்லீரலை சுத்தப்படுத்தும்* உடல் கழிவை வெளியேற்றும்* ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும்* நரம்பு மண்டலத்தை சமன்படுத்தும்.திராட்சையை வயது வித்தியாசமின்றி எல்லாரும் சாப்பிடலாம். பசியில்லாதவர்களுக்கு, மிகப்பெரிய வரப்பிரசாதம்; ஜீரணக்கோளாறு உள்ளவர்களுக்கு நிவாரணம் தரும். உடல் அசதி, பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்துக்கு திராட்சை மிகவும் ஏற்றது.திராட்சை பயிரில் அதிக அளவு பூச்சிக்கொல்லி தெளிக்கப்படுவதால், சந்தையில் வாங்கும் பழத்தை உப்பு கலந்த நீரில் கழுவிப் பயன்படுத்துவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !