ஆ...ஊ... மூக்கு எறியுதே...
நான், 5ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். படிப்பில் ரொம்பவும் சுமார். கணக்குப் பாடம் மண்டையில் ஏறவே ஏறாது; 'ஹோம் ஒர்க்'கும் செய்ய மாட்டேன். விளையாட்டில் சுட்டி. தினசரி கையில் பிரம்படியும், தலையில் கொட்டும் வாங்குவேன். என் கணக்கு வாத்தியார் மூக்குப் பொடி போடும் பழக்கம் உள்ளவர்.ஒருநாள் -அவர் என்னைக் கூப்பிட்டு, கையில் பத்து பைசா கொடுத்து, பக்கத்திலே இருக்கிற பெட்டிக் கடைக்குப் போய், மூக்குப்பொடி வாங்கிட்டு வரச் சொன்னார்.கணக்குப் வாத்தியார் மீது மனசுக்குள் ஏக கடுப்பு. கடைக்குப் போய், ஐந்து பைசாவுக்கு பொடியும், ஐந்து பைசாவுக்கு கடலை மிட்டாயும் வாங்கிச் சாப்பிட்டு விட்டேன். பெட்டிக் கடைக்கு அருகில் ஒரு மாவு மில் இருந்தது.அங்கு மிளகாய் அரைத்த தூள் தரையில் சிந்திக் கிடந்தது. நான் அதில் கொஞ்சம் துளை எடுத்து மூக்கு பொடியில் கலந்து வாத்தியாரிடம் கொடுத்தேன். அவர் ஒரு சிட்டிகை பொடியை எடுத்து உறிஞ்சினதும், 'ஆ...ஊ... மூக்கு எறியுதே... தண்ணீர் தண்ணீர்...' என்று கத்தி, 'களேபரம்' பண்ணியதை பார்த்து, மாணவர்கள் சிரித்து, ரசித்ததை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை.- கே.ஆர்.ராஜேந்திரன், மதுரை.(இது ரொம்ப கொடுமை ராஜேந்திரன். பொறுப்பாசிரியர்)