உள்ளூர் செய்திகள்

லட்சிய கனவு!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், சிங்கனுார் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில், 1996ல், 6ம் வகுப்பு சேர்ந்தபோது நடந்த நிகழ்வு... பள்ளியில் இட நெருக்கடி ஏற்பட்டது. மாணவர்கள் அதிகம் சேர்ந்ததால், அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் அமர வைத்து பாடம் நடத்தினார், ஆசிரியர் காசிலிங்கம். ஒரு நாள், 'லட்சியம்' பற்றி கேட்டார். சக மாணவன் மோகன்தாஸ் காந்தி, மாவட்ட ஆட்சியராக விரும்புவதாக கூறினான். ஆச்சரியத்துடன், விளக்கம் கேட்டார்.'பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறையால் மாற்று இடத்தை இரவல் பெற்று அமர்ந்து படிக்கிறோம்... இதே நிலை நீடிக்க கூடாது... நான் மாவட்ட ஆட்சியரானால் இந்த பிரச்னையை முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைப்பேன்...' என கூறினான்.அவன் சிந்தனையை போற்றி பாராட்டினார். நன்றாக படித்து ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றுகிறான் அந்த மாணவன்.என் வயது, 35; படித்து முடித்து, பல ஆண்டுகளுக்கு பின் பள்ளிக்கு சென்றிருந்தேன். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கையால் புதிய கட்டங்கள் கட்டப்பட்டுள்ளன. வசதியான வகுப்பறைகளில் படிக்கின்றனர் மாணவர்கள். இதைக் கண்டதும் பெருமிதம் கொண்டேன். அன்று, நண்பன் கூறிய லட்சிய கனவும் நினைவில் வந்தது.- ரா.ராஜ்மோகன், திண்டிவனம்.தொடர்புக்கு: 85249 06220


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !