அதிமேதாவி அங்குராசு!
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! நான் ஒரு 'க்ளாக்!'கோழி கூவிடுச்சு - பொழுது விடுஞ்சிடுச்சு! அப்படின்னு சொல்றோம்.கோழியை காலம் காட்டும் கடிகாரமாக, குறிப்பாக காலையை குறிக்கும் அலாரமாக கருதுகிறோம். ஆனால், உண்மையான கடிகாரப் பறவை எது தெரியுமா? 'காகம் பாப்பா' தான்!அதிகாலையிலும், அந்தி வேளையிலும் காகம் கரைவதால் மட்டும் இதை சொல்லவில்லை. பல ஆராய்ச்சிகள் செய்து காகத்தை பரிசோதித்த பின்னரே இந்த முடிவுக்கு வந்திருக்கின்றனர், ஆலந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.ஊசிமுனை அளவு கூட ஒளி புகாத இருட்டறை ஒன்றில், காகத்தை அடைத்து வைத்து பார்த்தனர். காலை - மாலை, இரவு - பகல் என்று சூரியன் மூலம் பொழுது போவது அதற்கு தெரிய வாய்ப்பே இல்லை. ஆனாலும், அந்த காகம் கச்சிதமாக காலையிலும், அந்தி நேரத்திலும் கரைந்ததோடு, காலை நேரத்தையும், மாலை நேரத்தையும் வேறுபடுத்தி காட்டியது.இதுபோதாதென்று கருதிய விஞ்ஞானிகள் கண்ணை பறிக்கின்ற செயற்கை ஒளியை காக்கையின் அறை எங்கும் பாய்ச்சினர்.ஆனால், அந்த செயற்கை வெளிச்சத்திடமும் ஏமாறாத காகம், அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் இயற்கையாகவே பொழுது விடிய தொடங்கிய போதுதான் சத்தமிட தொடங்கியது.ஆக, காக்கை ஒரு இயற்கையான கடிகாரப் பறவை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் விஞ்ஞானிகள்.குளிப்பது பெரும்பாவம்!'ஆமாம்! ஆமாம்! ஆமாம்னு பல பேர் சொல்றது என் காதில் விழுகிறது. குட்டீஸ் உங்களுக்கு குளிப்பது பிடிக்காதுதானே... இல்லையா? சில பேருக்கு குளிப்பது பிடிக்கவே பிடிக்காது; பல பேருக்கோ அப்படியே உல்டா.குளியல் பற்றி பல சுவாரஸ்யமான செய்திகளை இங்கு தெரிஞ்சிக்கலாமா?* ரோமானியர்கள் குளிப்பதை ஒரு விழா போன்று கொண்டாடினர். 2,500 பேர் வரை சேர்ந்து ஒன்றாக குளிப்பர். (சூப்பர்டா)* குளிப்பது பாவத்தை போக்கும் என்று நம்பினர் எகிப்தியர்கள். (ம்....ம்...)* மொகலாய மன்னர் அக்பர், திறந்தவெளியில் புதிய குளத்து நீரில் குளிப்பார். (சீ.... சீ... வெட்கம்)* கிரேக்க தத்துவஞானியான சாக்ரடீஸ், பெண்கள் நல்ல உடல் நலத்துக்கு, கழுதை பாலுடன், ஆலிவ் எண்ணெய் கலந்த கலவையில் குளிக்க வேண்டும் என்றார். (கழுத்தைக்கு எங்கே போவேன்?)* அழகி கிளியோபாட்ரா, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி பழ ரகங்களையும், ஆலிவ் எண்ணெயையும் நீரில் கலந்து குளிப்பார்.(ஹேய்...ய்... பிசிக்கி)அட எங்க நம்ம செய்தி? - அதான் குளிப்பது வேண்டாம்னு சொல்ற செய்தி எங்கன்னு 'காயாதீங்க' இதோ வருது!* 13ம் நூற்றாண்டில் ஐரோப்பியத் துறவியர்கள் பலரும் குளிப்பதை விரும்பவில்லை. (வரே... வா)* செயின்ட் கிரகரி என்னும் துறவி ஞாயிற்று கிழமைகளில் குளிப்பது மட்டுமே உடலுக்கு நல்லது என்றார். இன்னொரு துறவி குளிப்பதையே பெரும்பாவம் என்றார். (இத... இத... இதத்தான் எதிர்பார்த்தேன்)* விக்டோரியா காலத்தில் இங்கிலாந்தில் குளிப்பது என்பது எப்போதாவதுதான். (ஹை... ஜாலி)* நெப்போலியன் காலத்தில் குளிப்பது என்பது பணக்கார தன்மையாக கருதப்பட்டது.(ஹையோடா)தெரியாத விட்டமின்களின் தகவல்கள்!விட்டமின்கள் என்றால், ஏ,பி,சி என்று சொல்வோம். அதிகம் அறியப்படாத விட்டமின்கள் சிலவற்றை பற்றி அறிவோமா...?விட்டமின் B1 தயமின்;இது குறைந்தால் வரும் பிரச்னை - நரம்பு மண்டலத்தை பாதிக்கும் 'பெரி பெரி' என்ற நோய் வரும்.* இந்த விட்டமின் ஜீரணத்துக்கு உதவும். பசியை தூண்டும். நரம்பு மண்டலத்தை வலுவாக்கும். எந்த உணவுப் பொருட்களில் இந்த விட்டமின் அதிகம் இருக்கிறது?* முளைகட்டிய கோதுமை, பீன்ஸ், பீட்ரூட், முள்ளங்கி, புழுங்கலரிசி, எள் மற்றும் கீரை வகைகளில் கிடைக்கும்.விட்டமின் C.F., (ரிபோப்ளோவின்)இது குறைந்தால் வரும் பிரச்னை. வாய்ப்புண், தோல் வெடிப்பு மற்றும் பார்வை குறைபாடுகள்.* இதை சாப்பிட்டால் கிடைக்கும் பலன் - குடல் புண், வாய்ப்புண் வராமல் தடுக்கும்.* எந்த உணவுப் பொருட்களில் இந்த விட்டமின் அதிகம் இருக்கிறது?* வெள்ளைப் பூண்டு, கீரை, பச்சை மிளகாய், நிலக்கடலை மற்றும் பால், பாலாடை கட்டி, முழு தானிய வகைகள் மற்றும முட்டை.விட்டமின் B3 நியாசின்.இது குறைந்தால் வரும் பிரச்னை - சருமம் வறண்டு போகும்.* இதை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்?* வயிறு, குடல், தோல், நரம்பு மண்டலம் ஆகியவை ஆரோக்கியமாக இருக்கும்.* எந்த உணவுப் பொருட்களில்இந்த விட்டமின் அதிகம் இருக்கிறது?* நிலக்கடலை, சிறு தானியங்கள் முக்கியமாக தினை, ராகி, சோளம், மீன், சிக்கன், ஈரல், பேரீச்சம்பழம்.ஒரு பல்லுக்கு ஒரு முறையா?!உணவை மென்று உண்ண வேண்டும் என்பர். அமெரிக்க உணவு ஆர்வலர், ஹோராஸ் பிளெட்சர், ஒரு உணவு கவளம் குறைந்தபட்சம் 32 முறையாவது மெல்லப்பட வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார்.'மென்று தின்னாதவர்களை இயற்கை தண்டிக்கும்' என்று அவர் வலியுறுத்தினார். 1900ம் ஆண்டு வாக்கில் அவர் கூறிய அந்த வார்த்தைகள், பெரும்பாலானவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது.ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் பிளெட்சரின் வார்த்தையை நம்பி பின்பற்றினர்.அவர்கள் காலை, மதியம் இரவு உணவுகளை மணிக்கணக்கில் மென்று சாப்பிட்டனர்.(அச்சச்சோ)இதனால் அவர்களின் பற்களும், தாடையும் அதிகமாக பயிற்சி பெற்றன. பல ஆண்டுகளுக்கு இந்த பழக்கம் அமெரிக்கர்களிடையே நீடித்தது. இதனால், உணவு விடுதி நடத்தியவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.சாப்பிட வருபவர்கள் நீண்ட நேரம் இருக்கையை ஆக்கிரமித்தவாறு மெதுவாக மென்று உணவை ருசித்தது, விடுதியினருக்கு மனஉளைச்சலை கொடுத்தது.காலம் செல்ல செல்ல இந்த பழக்கம் மெதுவாக, மறைய தொடங்கியது. ஆனாலும், இன்றுவரை உணவை கூழாகும் வரை மென்று உண்பது ஆரோக்கியமானது என்ற நம்பிக்கை உள்ளது.அடடா! ஐடியா அடடா!'நான் ஈ': ஒரு வாளி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மண்ணெண்ணெய் விட்டு அறையை துடைத்தால் பூச்சிகள் நடமாட்டம் இருக்காது. தண்ணீரில் கொஞ்சம் உப்பு கலந்து துடைத்தால், ஈயின் உபத்திரவம் நீங்கும்.பாட்டரியின் வாழ்வு: ஸ்கூட்டி போன்ற கியர் வண்டிகளை உபயோகிப்பவர், காலையில் எழுந்தவுடன் ஒரு தடவை கிக் ஸ்டார்ட் செய்துவிட்டு, பின் பட்டன் சிஸ்டத்தில் ஸ்டார்ட் செய்து வண்டி ஓட்டினால், பாட்டரி நீண்ட நாளைக்கு வரும்.உப்பும், சர்க்கரையும்!இது நீரிழிவு உள்ளவர்களுக்கு. தினமும் இரண்டு கோதுமை ரொட்டி துண்டுகளுக்கு இடையில் மாரி பிஸ்கட் வைத்து சாண்ட்விச் மாதிரி சாப்பிடலாம்.கோதுமை ரொட்டியின் உப்பு சுவையும், மாரி பிஸ்கட்டின் மிதமான சர்க்கரையும் சேர்ந்து முழு உணவாக ருசிக்கும்.வெண்ணெய் கத்தி!பிறந்த நாள் மற்றும் திருமண விழாக்களுக்கு கேக் வாங்கும்போது பிளாஸ்டிக் கத்தி கொடுப்பர். கேக் வெட்டிய பிறகு மிக்ஸி இடுக்குகளில் ஒட்டியிருக்கும் பிசுக்கு, அழுக்குகளை சுரண்டி எடுக்க இந்த கத்தி உதவும்.என்றென்றும் அன்புடன், அங்குராசு.