உள்ளூர் செய்திகள்

புல்லட் புரூப் உடை!

உலகமெங்கும் நாட்டின் தலைவர்கள், ராணுவ உயரதிகாரிகள் மற்றும் தற்காப்பு மேற்கொள்பவர்கள் குண்டு துளைக்காத கவச உடையை அணிகின்றனர். இவ்வுடை பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படுகிறது என்றால் வியப்புதானே! நம்மைச் சுற்றியுள்ள அன்றாட பொருட்களான கார், டிவி, கம்யூட்டர், வீடியோ டேப், சிடி, ஏன் டூத்பிரஷ் போன்றவை யாவும் பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படுகிறது. இதே போல புல்லட் புரூப் உடையும், 'கவ்லார்' என்ற ஒருவகை பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படுகிறது. பல அடுக்குகள் கொண்ட இந்த உடை புல்லட்டின் அதிவேகத் தாக்குதலைச் சமாளிக்கிறது. இதனால் உடலில் குண்டு பாயாத வண்ணம் காக்கிறது.'கவ்லார்' வகை பிளாஸ்டிக், குண்டு பாயாத கண்ணாடி மற்றும் கார் தயாரிக்கவும், அதிக பளு தாங்கும் கேபிள், விமான உடற்பகுதி ஆகியவை தயாரிக்கவும் பயன்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !