ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (17)
ஹாய்... ஹாய்... மாணவாஸ்... குட்மார்னிங். இதோ வந்துட்டேன் உங்களோட வர்ஷிதா மிஸ். உதகையில் இருந்து இந்தி ஆசிரியர் அப்துல் ரஹீம், 'வர்ஷிதா மிஸ் சொல்லித் தரும் ஆங்கிலம் மிகவும் சுலபமாக கற்க முடிகிறது. மாணவர்கள் மட்டுமல்ல... அனைத்து வயதினரும் ஆங்கிலம் கற்கிறோம்' என எழுதியிருந்தார். நன்றி சார்!கடந்த வாரம் கொடுத்த ஹோம் ஒர்க்ஸ் எல்லாம் நல்லபடியா செய்தீர்களா? சரி...Simple Present tense ல Negative வாக்கியங்கள் அமைப்பது எப்படின்னு படிச்சோம். இனி கேள்வி வாக்கியங்கள் அமைப்பது எப்படின்னு பார்க்கலாமா?Simple Present ல் உபயோகப்படும் Helping verbs (i) Do (ii) Does.I, you, they, we - இவற்றை Short ஆ 'அய்யோ தேவி' என ஞாபகம் வச்சிக்கோங்க.Does என்பதை III Person Singular க்கு பயன்படுத்த வேண்டும்.அதாவது He, She, it வந்தால் பயன்படுத்த வேண்டும்.இப்போ கேள்வி வாக்கியங்களை அமைப்பது எப்படின்னு பார்ப்போமா?Helping verb + Subject + M.V+O or Adverb.I like இதில் I என்பது Subject. like என்பது Verb.இது என்ன வாக்கியம்? Positive வாக்கியம் என்று உடனே சொல்லிடுவீங்கதானே. இதை Negative வாக்கியமாக மாற்றI do not like - I - SubjectDo - Helping verbNot - Negative wordLike - Verbஇதை பேசும்போது ஐ டோன்ட் லைக் - I don't like என்று கூற வேண்டும்.இதேபோல் கேள்வி வாக்கியங்களை அமைக்க,Helping verb + Subject + Main verbDo you like?இத்துடன் Object - Him இணைக்கும்போது அந்த வாக்கியம் இன்னும் அழகாகிறது அல்லவா?Do you like him?சரியா? மாதிரிக்கு சில வாக்கியங்களை அமைத்து தருகிறேன். அதை படித்துப் பார்த்து அதேபோல் சில வாக்கியங்களை Practice பண்ணுங்க.இதே போலவே உங்களுக்குத் தெரிந்த Verb களை பயன்படுத்தி நிறைய வாக்கியங்களை எழுதி எழுதி பழகுங்கள். அப்போதுதான் அவை உங்களது மனதில் பதியும். மூளையும் நீங்கள் பேசும்போது அந்த வார்த்தைகளை உங்களது நினைவிற்கு கொண்டு வரும். சரியா?H.V - Subject - M.VDo you play? நீ விளையாடுகிறாயா?Do you cook? நீ சமைக்கிறாயா?Do they go?அவர்கள் போகிறார்களா?Does she dance?அவள் நடனம் ஆடுகிறாளா?Does it work?அது வேலை செய்கிறதா?Do they act?அவர்கள் நடிக்கிறார்களா?பேசிப் பழக குட்டி வாக்கியங்கள்!1. Don't interrupt - இடையில் பேசாதே!2. Don't make noise - சத்தம் போடாதே!3. Don't forget about it - இதைபற்றி மறந்துவிடவேண்டாம்!4. Does she dye her hair - அவள் தலைக்கு சாயம் போடுகிறாளா?5. Does your shoe pinch you? - உன் ஷூ கடிக்கிறதா?6. Don't chatter - வீண் பேச்சு பேசாதே!7. Do you accept cheques? - நீங்கள் காசோலையை ஏற்றுக்கொள்வீர்களா?- பை! பை!, உங்கள் வர்ஷி மிஸ்!