உள்ளூர் செய்திகள்

நெஞ்சில் சுமந்து!

கோவை, சமத்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1963ல், 6ம் வகுப்பில் சேர்ந்தேன். வகுப்பு ஆசிரியர் தங்கராஜ், மிகவும் அன்பானவர். ஆங்கில பாடம் நடத்துவார். முதல்நாள் நடத்துவதை கவனம் சிதறாமல் கவனித்து, மறுநாள் வீட்டுப் பாடமாக எழுதி வர வேண்டும்.அன்று எழுதி வந்த வீட்டுப் பாடத்தை அனைவரும் மேஜையில் வைத்தனர். நான் எழுதியிருக்கவில்லை; நடுங்கியபடி நின்றிருந்தேன்.கம்புடன் அருகில் வந்தவர், 'ஏன்... எழுதவில்லையா...' என, கோபத்துடன் கேட்டார். நடுங்கியபடி, 'அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை... நாளை எழுதி வந்துடுறேன்...' என, பணிவாக கூறினேன்.அமைதியுடன், 'சரி உட்காரு...' என கூறினார். அன்று மாலை தேடிப் பிடித்து என் வீட்டுக்கு வந்தார். தாயிடம், நலம் விசாரித்து, 100 ரூபாயை கொடுத்து, 'தைரியமாக இருங்க...' என கூறினார். என் குடும்ப நிலை கண்டு, 'ஒரு வாரம் விடுப்பு எடுத்து, அருகில் இருந்து அம்மாவைப் பார்த்துக் கொள்...' என ஆறுதல் கூறினார். வறுமையால், என்னால், 7ம் வகுப்பை தாண்ட முடியவில்லை. என் வயது, 70; தையல் தொழில் செய்து வருகிறேன். அன்று அறிவுரை கூறிய குருநாதரை நெஞ்சில் சுமந்து வாழ்கிறேன்.- கே.எம்.பத்மானந்தன், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !